டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று எட்டாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் அன்னா ஹசாரே, வெயிலில் தலை காட்டக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.அவ்வாறு அவர் வெயிலில் நடமாடினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஹசாரேவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், அதே நேரத்தில் அவர் சற்று பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஹசாரேவின் கண்களில் நீர் கோர்த்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 73 வயதான ஹசாரே வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ராம் லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.





Indian Rupee value